அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை – நிதின் கட்கரி!!

0
114
#image_title

அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை – நிதின் கட்கரி!!

நாக்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்று பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தன்னுடைய பணிக்காலத்தில் தான் ஏராளமான பணிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் மண் சேமிப்பு பருவநிலை மாற்றம் தரிசு நிலம் போன்றவற்றில் தான் இன்னும் ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய இருப்பதால் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என தெரிவித்திருந்தார்.

போதும் என தான் ஏற்கனவே மக்களிடம் சொல்லிவிட்டதாகவும் நான் பணியாற்றி இருக்கிறேன் என்று நினைத்தால் எனக்கு வாக்களியுங்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என பேசினார்.

அவரது இந்த பேச்சு அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆர் எஸ் எஸ் இயக்கத்துடன் மிக நெருக்கமாக இருந்து வரும் நிதின் கட்கரி அண்மைக்கலமாக பாரதிய ஜனதா மேலிடத்துடன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றியமைக்கப்பட்ட பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் நிதின் கட்கரி பதிலுக்கு தேவேந்திர பட்னவீஸ் பெயர் இடம் இருந்தது.

இத்தகைய சூழலில் நிதின் கட்கரியின் இந்த பேச்சு அவர் அரசியலில் இருந்து விலக இருப்பதாக மராத்திய ஊடகங்கள் கடந்த சில நாட்களாக எழுதி வந்தன.

இத்தகைய சூழலில் நேற்று மாலை மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அவர் அரசியலில் இருந்து விலக இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர் அரசியலில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்றும் இது போன்ற விவகாரங்களில் ஊடகங்கள் ஊடக அறம் சார்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.