தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது:!ஹெச்.ராஜா அதிரடி பேட்டி!

0
63

ஹெச்.ராஜா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மொழிக் கொள்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையை திமுக சிதைக்கப் பார்க்கிறது.எனவே திமுகவை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் கூறுபவர்கள்,சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளிலிருந்து அவர்களது குடும்பத்தினரின் பிள்ளைகளை,சமச்சீர் பள்ளிகளில் சேர்த்துவிட்டு பின்னர் அவர்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இருமொழிக் கொள்கை தான் வேண்டும் என்று பேசட்டும்.இல்லையென்றால் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கட்டும்.

மேலும் தமிழகத்தில் பாஜகவின் துணையின்றி 2021-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், அந்த அளவிற்கு வலிமையான இடத்தில் பாஜக உள்ளது என்றும் கூறினார்.இதுமட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த
பா.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டிய நிலை வந்தால்,அது அந்தக் கட்சியின் தலையெழுத்து. அதற்கு நான் எந்த ஒரு கருத்தும் கூற முடியாது என்று கூறினார்.

மேலும் அவர் நீட் தேர்வு குறித்து பேசுகையில்,போதிய கால அவகாசம் கொடுத்தும் மாணவர்களை இதுவரை நீட் தேர்வுக்கு தயார்படுத்தாமல் இருந்தது யாருடைய தவறு?இதற்கு மத்தியஅரசை குறை கூறினால் எப்படி? மத்திய அரசு இதற்கு எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?என்றும் கேள்விகளை எழுப்பினார்.

இது மட்டுமின்றி மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவர முறைகேடு செய்யும் அரசு அலுவலகர்களை,எந்த அரசுப் பணியிலும் இனிமேல் தொடர முடியாதவாறு அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

author avatar
Pavithra