நியாயமான போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது…….! கே.ஸ்.அழகிரி ஆவேசம்…..!

0
52

 

 

மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் மத்திய அரசின் இந்த சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உள்பட பல முக்கிய நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பாஜக அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிராகவும், மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கற்பழிப்பு சம்பவத்தை கண்டித்தும், தேனி மற்றும் போடி நெடுஞ்சாலையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதன் காரணமாக டிஐஜி முத்துசாமி தலைமையில் அந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒன்று திரண்டனர்.

இதற்கு மத்தியில் டிராக்டரில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது ஆனாலும் ஒரு ஒரு நேர்மையான ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் எதிராக இருந்தால், அவர்கள் விதித்த தடைகளையும் மீறி நாங்கள் டிராக்டரை பயன்படுத்துவோம் என்று கே எஸ் அழகிரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு தடைகளை தாண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றே தீரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பெயரில் இன்று காலை சுமார் இருநூறுக்கும் அதிகமான டிராக்டர்களில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திறந்த போது அவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை அதனை தொடர்ந்து காவல்துறையினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தேனி மற்றும் போடி ஆகிய சாலைகளில் சாலை மறியலில் ஈடுபட்டபோது, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட பல முக்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.