Connect with us

Breaking News

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இனி இல்லை? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவு!

Published

on

No more than one power connection? The order issued by the Electricity Regulatory Commission!

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இனி இல்லை? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவு!

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த  2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதை தொடர்ந்து அதற்கான கால அவகாசத்தையும் வழங்கியது. கால அவகாசமானது  கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம்  தேதி நிறைவடைந்தது. இனி கால அவகாசம்  வழங்கப்படாது என மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

Advertisement

இந்நிலையில் மின் ஒழுங்குமுறை ஆணையம் கட்டண விகித பட்டியலில் மாற்ற உத்தரவின்  பிரிவு 5.8.5 அல்லது 8.6 ன் படி  ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் இரண்டு மின் இணைப்புகளை வழங்குவது பற்றியும் ஏற்கனவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் அவற்றை இணைப்பது பற்றியும் மின்வாரியத்திற்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு மற்றும் ஒரு இடத்திற்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதனை முறையாக நோட்டீஸ் கொடுத்து கட்டண விகித பட்டியல் படி ஒன்னு ஏ யில் ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும். மேலும் நுகர்வோர் அந்த மின் இணைப்பை இணைப்பதற்கு முன்வரவில்லை என்றால் அதை 1டி  கட்டணும் விகிதப்பட்டியலாக மாற்ற வேண்டும். மேலும் மின்வாரிய மின் இணைப்பு கொடுக்க அந்த பகுதி வாடகை ஒப்பந்தமாக  அல்லது குத்தகை ஒப்பந்தமாக  இருக்க வேண்டும். சிலர் ஒரே வீட்டில் சொந்த பந்தங்களுக்காக அண்ணன் தங்கைகள், அக்கா தம்பிகள், தந்தை மகன், தந்தை மகள் என்று தனித்தனி குடும்பமாக இருக்கலாம்.

Advertisement

அங்கு வாடகை ஒப்பந்தமாவோ, குத்தகை ஒப்பந்தமாகவோ வருவதற்கு வாய்ப்பில்லை, அதனால் இது போன்ற குடும்பங்கள் உள்ள முறையாக பிரிக்கப்பட்ட குடியிருப்பில் அங்கு மற்றொரு கூடுதல் மின் இணைப்பு 2004 மின் பகிர்மான விதியின்படி பெற்றிருந்தால் அந்த இடங்களில் தனி ரேஷன் கார்டு இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும், இதன் நோக்கம் 100 யூனிட் மின் மானியம் என்பது முறையாக இருக்க வேண்டும் என்பதே.

குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1 டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக இருக்கும் என்பதுதான் அதாவது ஒரு மின்சார இணைப்பு  மட்டுமே ஒன் எ வின் கட்டண வீதப்பட்டியலாக இருக்க வேண்டும் இது முறையாக தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்ட பிறகே அமல்படுத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement