செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
108

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கேரள மாநிலத்தில் இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் திறமை, பணி மூப்பு ஆகியவையை வைத்தே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் கேரள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஈடுபட்டு வந்தது.

அதன்படி இதற்கான புதிய திட்டங்களை இத்துறை அறிவித்துள்ளது. அதில், உயர் அதிகாரிகளின் ரகசிய குறிப்புக்கு பதில் இனி ஊழியர்களின் பணித்திறமை குறித்த மதிப்பெண் மூலம் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு ஊழியர் பதவி உயர்வு பெற மதிப்பெண் முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண் ஒன்று முதல் பத்து மதிப்பெண் வரை அளிக்கப்பட உள்ளது. இதில் அதிக மதிப்பெண் எடுக்கும் ஊழியருக்கு பதவி உயர்வும், ஐந்து மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுக்கும் ஊழியருக்கு பணியாளர் நலத்துறை சார்பில் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

அவர்கள், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதம், அலுவலக கோப்புகளை முறையாகவும் மற்றும் விரைவாகவும் அனுப்புதல், மேலும், அலுவலக கோப்புகளில் குறைகள் இருந்தால் அதனை அவர்கள் சரிசெய்யும் முறை உள்ளிட்ட செயல்பாடுகளை வைத்து அவர்களுக்கு இந்த மதிப்பெண் வழங்கப்படும்.

அவர்கள் மீது தொடர்ந்து புகார் வந்தாலோ மற்றும் பணி நேரத்தில் அலுவலகத்தை விட்டு அடிக்கடி வெளியே சென்றாலோ அவர்களுக்கான மதிப்பெண் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கேரளா அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வை பாதிக்கும் என்று கூறி அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K