இனி இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

0
80
No more restrictions on this! Announcement issued by the Central Government!
No more restrictions on this! Announcement issued by the Central Government!

இனி இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது.மக்கள் அத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்பட்டனர்.முதல்,இரண்டாம் என கடந்து தற்போது மூன்றாவது அலை நடந்து கொண்டிருக்கிறது.இந்தியாவில் முதல் அலையின் போது அதிகளவு பாதிப்பு ஏற்படா விட்டாலும் இரண்டாம் அலையில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டது.அதனால் அனைத்து துறைகளுக்கும் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்தனர்.

தொற்று குறையும் வரையில் அந்த கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றினர்.மேலும் தற்போது தடுப்பூசி நடைமுறையில் உள்ளது.அதனால் நாத்து துறையினரும் கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அந்தவகையில் கொரோனா தொற்றினால் முதலில் குறைந்தளவு உள்நாட்டு விமானங்களே இயக்கப்பட்டது.அதிலும் 35% இருக்கைகள் கொண்டாவாறு மக்கள் பயணிக்க வேண்டுமென்று முதலில்  நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

அதனையடுத்து நாளடைவில் தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தினால் 50% சதவீதமாக மாற்றினர்.அதனையடுத்து 80% மாக மாற்றினர்.அதேபோல வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் விசாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தினர்.ஆனால் நாளடைவில் தொற்று பாதிப்பு குறைந்ததால் மத்திய அரசு அந்த கட்டுப்பாடுகளை தவிர்த்தது.அதேபோல தற்பொழுது அனைத்து உள்நாட்டு விமனா பயணிகளும் 100% வீதம் வரை பயணிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

அதவாது உள்நாட்டு விமனா சேவை எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த தளர்வானது வரும் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.மேலும் அனைத்து விமான நிலையங்களும் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.அதேபோல மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.