இனி சிறுவர்கள் வாகனம் இயக்க கூடாது! மீறினால் பெற்றோருக்கு சிறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
99
No more children driving! The government has issued an action order for parents to be jailed if they violate it!
No more children driving! The government has issued an action order for parents to be jailed if they violate it!

இனி சிறுவர்கள் வாகனம் இயக்க கூடாது! மீறினால் பெற்றோருக்கு சிறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றது.அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்து வருகின்றது.அதுமட்டுமின்றி பேருந்தின் மேற்கூரையில் நடனம்மாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்கான இனி பேருந்தின் படியில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையற்ற இடத்தில் ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ 1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் சிறுவர்கள் வாகனம் இயக்கினால் அவர்களுடைய பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K