இனி 3 சிலிண்டர்கள் பிரீ! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

0
104
No more 3 cylinders Free! People with joy!
No more 3 cylinders Free! People with joy!

இனி 3 சிலிண்டர்கள் பிரீ! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற்றது. உத்திரபிரதேசத்தில் மொத்தம் நானூற்று மூன்று தொகுதிகள் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதி கட்சி உடன் இணைந்து போட்டியிட்டது. அவற்றில் 114 இடங்களில் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. இம்முறை பாஜகவை எதிர்த்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால் தற்போதிருந்தே  பிரச்சாரத்தில் முழு ஈடுபாட்டையும் கொடுத்து வருகிறார். அந்தவகையில் மாதம்தோறும் ,இம்முறை தேர்தலில் எங்களை வெற்றி பெற வைத்தால் பல திட்டங்களை செய்வோம் என்று மக்களிடம் கூறி வருகிறார்.

கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியது, மாணவிகள் தற்போது செல்போன் இன்றி படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆட்சிக்கு வந்தால் மாணவிகள் அனைவருக்கும் செல்போன் வழங்கப்படும் என்று கூறினார். அதேபோல மின் ஸ்கூட்டரும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதன் படி வரும் தேர்தலில் வெற்றிபெற பல யுக்திகளை செயல்படுத்த உள்ளனர் என்று  அரசியல் வட்டாரங்கள் என்று கூறுகின்றனர்.அதனால்  வரும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை காண காங்கிரஸ் தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு பல வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ 32 கோடியை தவிர மற்ற விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி நெல் கோதுமை போன்றவைக்கு  ரூ 2500க்கும், கரும்பு ரூ.400 க்கும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 20 லட்சம் அரசு வேலைகளை இளைஞர்களுக்கு வழங்குவோம் என்று கூறியுள்ளனர். அதேபோல பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் மக்கள் 10 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி, தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 40 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் கணவரை இழந்தவருக்கு மாதம்  ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

தற்பொழுது சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அவற்றை கருத்தில் கொண்டு தற்சமையத்தில் மக்களை தன்வயம் கொண்டுவர புதிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளனர். மக்களை கவரும் நோக்கில் மூன்று இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். தற்போது சிலிண்டர் விலை ஏறிய நிலையில் இவ்வாறு கூறியுள்ளனர். மக்களின் ஆதரவை திரட்ட இதுபோல பல்வேறு திட்டங்களை ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று கூறி வருகின்றனர்.