இனி மாஸ்க் கட்டாயம்! இல்லையென்றால் ரூ.1000  அபராதம்!மாநில அரசின் அதிரடி உத்தரவு!

0
65
No longer is the mask mandatory! Otherwise a fine of Rs.1000! State Government Action Order!
No longer is the mask mandatory! Otherwise a fine of Rs.1000! State Government Action Order!

இனி மாஸ்க் கட்டாயம்! இல்லையென்றால் ரூ.1000  அபராதம்!மாநில அரசின் அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்றானது பரவி வருகிறது.இப்போதைய தொற்றானது 2 வது,3 வது அலை என உருமாறி பரவி வருகிறது.அதில் அமெரிக்கா முதல் இடத்திலும்,பிரேசில் இரண்டாம் இடத்திலும்,நான்காம் இடத்திலிருந்த இந்தியா தற்போது மூன்றாம் இடத்திலும் உள்ளது.நாளுக்கு நாள் உயிரிழப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது

அந்தவகையில் நேற்று பிரதமர் மோடி அதிகம் தொற்று பரவியுள்ள மாநில முதலமைச்சர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அதில் அவர்கள் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தனர்,அதில் அனைத்து கடைகள்,மால்கள்,திரையரங்குகளில் 50%  மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

 திருமணங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.அதே போல இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மத சார்புடைய கூட்டங்கள்,திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.இவ்வாறு பல்வேறு கட்டுபாடுகளை போட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.அரசாங்கம் எவ்வாறு வலியுறுத்தினாலும் மக்கள் அந்த கட்டுப்பாட்டு விதிமுறைகளை ஓரிரு நாட்கள் மட்டுமே கடைபிடிக்கின்றனர்.அதன் விளைவுகள் தெரியாமல் பின்பு கடைபிடிப்பதையே விட்டுவிடுகின்றனர்.

அதனால் தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் மாஸ்க் அணியா விட்டால் ரூ.1000 அபராதம் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இவ்வாறு செய்யும் போது மக்கள் அனைவரும் அபராதம் கட்டுவதை தவிர்க்க முகக்கவசம் அணிந்து வெளியே செல்வார்கள்.அதுமட்டுமின்றி பாதுகாப்புடனும் இருப்பார்கள்.இவற்றால் அதிக அளவு நோய் பரவுவதை தவிர்க்கலாம்.