விவசாயக் கடன் தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விவசாயிகள் அதிர்ச்சி!

0
57

இன்றைய தினம் விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கான ரசீதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு வழங்க இருக்கிறார். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பதற்கான அரசாணை கூட வெளியிடப்பட்டது. சுமார் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து செய்யப்படுவதன் மூலமாக சுமார் 16.34 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடிகாண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட இருக்கின்ற இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்படி வேளாண் அல்லாத இனங்களுக்கு கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயக் கடன்களுக்கான மானியங்கள் வாங்கியிருந்தால் மீதி இருக்கின்ற தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வோம், ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரையில் நிலுவையில் இருந்த விவசாய கடன் வட்டி, அபராத வட்டி போன்றவை தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here