முதல்வரின் செயலால்! கண் கலங்கிய மாணவர்கள்!

0
73

2020-21ஆம் வருடத்திற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். இதைப்பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் அவர்களுடைய உத்தரவின்படி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் இன்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கும் 2020- 21ஆம் வருடத்திற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

2020-21ஆம் வருடத்திற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ சேர்க்கைக்காக சென்ற பதினாறாம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து இன்றைய தினம் மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் காலை 9 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது, முதல்வர் அவருடைய சிந்தனையில் தோன்றிய இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத ஒன்றாகும்.

மருத்துவ இளங்கலை படிப்புகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அமல் படுத்தியத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் இன்று 267 மாணவர்கள் அழைக்கப்பட்டு கவுன்சிலிங் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை யுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வு துறையும் மிகச் சிறப்பாக மேற்கொண்டது இதற்கான வரவேற்பு குழு ஆலோசனை வழங்கும் குழு சான்றிதழ் சரிபார்ப்பு குழு மற்றும் பள்ளிக்கல்வித்துறை என்னுடைய வழியாக சான்றிதழ் அளிப்பதற்கான குழு போன்ற பல குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

அதோடு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கலந்தாய்வின் போதே மாணவர்களின் இருப்பிடச் சான்று, மற்றும் ஜாதி சான்று, அதோடு மதிப்பெண் சான்று போன்ற அனைத்தையும் சரிபார்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரிய எல்சிடி திரையில் தகுதி பட்டியல் அவர்களை பார்த்து கவுன்சிலிங்கில் பங்கு பெறும் வகையில் மிக சிறப்பாக வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. வெளிமாநிலங்களில் இருந்து விண்ணப்பம் செய்பவர்களுக்கு குறைந்தபட்சமாக 7 வருடங்கள் தமிழ்நாட்டிலேயே படித்திருக்க வேண்டும்.

தாய் அல்லது தந்தை தமிழ்நாட்டில் இருப்பிடச்சான்று வாங்கியிருக்க வேண்டும், இதுபோன்ற பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகளை பின்பற்றி அதன் வழியாக சான்றிதழ்களை சரிபார்த்து எந்த ஒரு குழப்பத்திற்கும் இடமளிக்காமல், கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த கொரோனா காலத்திலும் பொது சுகாதாரத் துறை உரிய நடைமுறைகளின் படி சமூக இடைவெளியை விட்டு இந்த வருடம் நேரடி முறையில் இந்த கலந்தாய்வை நடத்துகின்றது.

இன்று பிற்பகல் முதல்வர் அவர்களின் திருக்கரங்களால் இந்த கலந்தாய்வில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. முதல்வரின் இந்த நல்ல திட்டத்திற்கு மாணவ மாணவியர் மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களும் கண்ணீர் மல்க தங்களுடைய நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த திட்டத்தினை கொண்டுவந்த முதல்வர் அவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது இவ்வாறு அவர் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.