கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டமா?

0
98
No victory celebration without MSDhoni

நேற்றைய முன்தினம் நடந்த ஐபில் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணையை எதிர்த்து ஆடியது. இதில் சென்னை அணி 3 விக்கட்டுகள் மட்டுமே இழந்து 27 ரன் வித்தியாசத்தில் வென்றது.

கேப்டன் டோனி தலைமையில் இது சென்னை அணி வாங்கும் நான்காவது ஐபில் கப். ஐபில் கோப்பையுடன் சென்னை அணிக்கு 20 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதையும், பெங்களூரு வீரர் ஹர்ஷல் பட்டேல் (32 விக்கெட்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இதே போல் ரன்குவிப்பில் முதலிடம் பிடித்த சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்தியதுடன் ரூ.10 லட்சம் பரிசையும் பெற்றார்.

டோனி, அடுத்த ஐபில் போட்டியில் தான் இருப்பது குறித்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய்ய வேண்டும், மிக ஏலம் நடைபெற இருக்கிறது, புதிதாக 2 அணிகள் வர இருக்கின்றன. 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அணி 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எனவே இனி உருவாக்கப்படும் அணி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்படுமாறு உருவாக்கப்படும்.

டோனி தற்போது T 20 உலக கோப்பைக்கான ஆட்டத்தில் இந்திய அணி ஆலோசகராக இணைந்து விட்டார்.

சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், டோனி உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இணைந்து விட்டதால் தற்போதைக்கு சென்னை அணி வெற்றி கொண்டாட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை. டோனி உலக கோப்பை போட்டி முடிந்து திரும்பிய பிறகே சிறய அளவில் வெற்றி கொண்டாட்டம் நடைபெறும் என்றார்.

 

 

 

 

 

 

 

 

author avatar
Parthipan K