தமிழகத்தில் நோய்த்தொற்று இல்லாத அந்த 7 மாவட்டங்கள்!

0
56

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது முதல் தொடர்ந்து நாள்தோறும் மத்திய, மாநில, அரசுகள் நோய்த்தொற்று நிலவரம் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

அதன்படி மாநில அரசின் சார்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அனுதினமும் நோய் தொற்று பாதிப்பு நிலவரம், குணமடைந்தவர்கள் நிலவரம், தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் நிலவரம், நோய் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் நிலவரம், உள்ளிட்ட விவரங்களை மாநில அரசின் செய்திக்குறிப்பில் வெளியீடு செய்கிறது.

அதேபோல மத்திய அரசின் சார்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் நாட்டில் நோய்த்தொற்று பரவல் நிலவரம், நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் நிலவரம், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் நிலவரம், தற்போது பரிசோதனை செய்யப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை மத்திய அரசின் செய்திக்குறிப்பில் வெளியீடு செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிவிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 19 ஆண்கள் 16 பெண்கள் என்று 35 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 17 பேர் உட்பட 9 மாவட்டங்களில் மட்டும் நோய் தொற்று பாதிப்பு பதிவாகியிருக்கிறது. 29 மாவட்டங்களில் யாருக்கும் நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என சொல்லப்படுகிறது.

அதோடு 12 வயதிற்குட்பட்ட 7 குழந்தைகளுக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட 5 முதியவர்களுக்கும் நேற்றையதினம் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாகி இருக்கின்றது.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில், 60 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து 4வது நாளாக நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. நோய்தொற்று பாதிப்பிலிருந்து 51 பேர் விடுபட்டிருக்கிறார்கள் தற்சமயம் சிகிச்சையிலிருப்பவர்கள் எண்ணிக்கை 306 ஆக இருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.