3-3-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
80

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சர்வதேச சந்தைகளில் நிலவிவரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு நாள்தோறும் மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்ற அனுமதியை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது.

அதன்படி இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

ஆனாலும் சற்றேறக்குறைய 3 மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.கடந்த செப்டம்பர் மாத வாக்கில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை சற்று குறைத்தது.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விற்பனையில் 2வது இடத்திலிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வார காலமாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கச்சா எண்ணெயின் விலை நிலவரம் மிகவும் கடுமையாக அதிகரித்திருக்கிறது ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வருகிறது.அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101.40 காசுக்கும், டீசலின் விலை 91.43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெயின் விலை நிலவரம் உயர்ந்த பிறகும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமலிருப்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இதில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக பலர் தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது உத்திரபிரதேசம் உட்பட நாட்டின் 4 முக்கிய மாநிலங்களில் சட்டசபை பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது அதனை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்காமல் இருக்கிறது என்று தெரிவித்து வருகிறார்கள்.