Connect with us

Breaking News

வெங்காய ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை – மத்திய வா்த்தக அமைச்சகம் விளக்கம்

Published

on

வெங்காய ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை – மத்திய வா்த்தக அமைச்சகம் விளக்கம்

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்று மத்திய வர்த்தக அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு எந்த விதமான தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் காலகட்டத்தில் ரூ.4,343 கோடி மதிப்பிலான வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 16.3 சதவீதம் அதிகரிப்பாகும். இதில் டிசம்பா் மாதத்தில் மட்டும் வெங்காய ஏற்றுமதி மதிப்பு முந்தைய மாதத்தை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காய விதை ஏற்றுமதிக்கு மட்டும் தான் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Advertisement