அமெரிக்காவில் நித்தியானந்தாவின் கைவரிசை!! தனித்தீவுக்கு வந்த திடீர் சோதனை!!

0
204
Nithyananda's handbook in America!! A sudden raid on Tanithivu!!
Nithyananda's handbook in America!! A sudden raid on Tanithivu!!

அமெரிக்காவில் நித்தியானந்தாவின் கைவரிசை!! தனித்தீவுக்கு வந்த திடீர் சோதனை!!

இந்தியாவில் சர்சைகக்ளுக்கு பெயர்போன சாமியா   ர்களில் மிகமுக்கியமான சாமியார் நித்தி என்கின்ற நித்தியானந்தா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் வெளிநாடு தப்பிசென்றார். இந்நிலையில் பசிபிக் பெருங்கடலில் தீவு ஒன்றிணை விலைக்கு வாங்கி அதற்க்கு கைலாசா நாடு என்று பெயர் சூட்டி தன்னைதானே அதிபராக அறிவித்துக்கொண்டு, அந்த நாட்டிற்கென தனி கொடி, ரூபாய்நோட்டுக்கள், பாஸ்போர்ட், ஆகியவற்றை அறிவித்து பல்வேறு நாடுகளுக்கான தூதர்களையும் அறிவித்து, தனது நாட்டிற்கான தூதராக விஜயபிரியாவை நியமித்து பெறும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜெனிவாவில்நடைபெற்ற ஐநாசபை கூட்டத்தில் பேசவைத்து சர்ச்சையை உருவாக்கினார். இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள நோவார்க் நகரத்துடன் ஒப்பந்தகள் செய்வது போன்ற புகைப்படங்களை அவர்களது இணையதளத்தில் பதிவேற்றி, கைலாசா நாட்டிற்கு ஐநாசபை மற்றும் அமெரிக்கா அங்கீகாரம் அளித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினர்.

ஆனால் அமெரிக்கவின் சில நகரங்களில் ஏமாற்று வேளையில் ஈடுபட்டது தற்போது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. மேலும் இவர்களின் ஏமாற்று வேலையை புரிந்துகொண்டநோவார்க் நகர மேயர், கைலசாவுடன் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது நித்திக்கு பெறும் பின்னடைவாக அமைந்தது. கலாச்சாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள 30 நகரங்கள் கைலசவுடன் தங்களது ஒப்பந்தகளை ரத்து செய்துள்ளன. இந்த ஒப்பந்த ரத்து காரணமாக செய்வதறியாது திகைத்து வருகிறார் நித்தி.

மேலும் நித்தியின் பெண் சீடர்கள் மேலும் பல நகரங்களை தொடர்பு கொண்டு தங்களுடன் ஒப்பந்தம் செய்ய வற்புறுத்துவதாக கலிபோர்னியாவை சேர்ந்த எம்பிக்கள் இருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது உள்ள இந்த சூழலில் நித்திக்கு எதிராக அமெரிக்க எம்பிக்கள் மற்றும் நோவார்க் நகர மேயர் எதிர்ப்பு கூறியிருப்பது, நித்தின் கைலாசா என்ற தனிநாடு கனவு நிறைவேறுமா அல்லது கானல்நீர் போல ஆகிவிடுமா என்றுகருத்து நிலவி வருகிறது.இருப்பினும் நித்தியின் பெண் சீடர்கள் அமரிக்காவின் பல மாகாணங்கள் மற்றும் முக்கிய நகரங்களின் அதிகாரமிக்க நபர்களுடன் ஒப்பந்தகள் பற்றி பேசி வருவது குறுப்பிடத்தக்கது.