திருமண தாமதத்தை நீக்கும் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்!

0
222

2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் திருவிடந்தை கோவில் என்று சொல்லப்படுகிறது. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த பல்லவ மன்னர்களாலும், சோழ மன்னர்களாலும், இந்த கோவில் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் சில கோவில்களில் திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலும் ஒன்று 108 திவ்யதேசங்களில் ஒன்று என திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட புண்ணிய ஷேத்திரம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இக்கோவிலின் இறைவனான திருமால் நித்திய கல்யாண பெருமாள், லட்சுமி வராகப்பெருமாள், என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவியாக கோமளவல்லி தாயார் இருக்கிறார். புன்னைமரம் இக்கோவிலின் தல விருட்சமாக விளங்குகிறது.

புராணங்களினடிப்படையில் குனி என்ற முனிவரும் அவருடைய மகளும் சொர்க்கம் செல்ல முயற்சித்த போது அவர்களை சந்தித்த நாரதர் குனி முனிவரின் மகளுக்கு திருமணம் நடைபெறாததால் அவளால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று தெரிவித்தார்.

அதோடு தேவலோகத்திலுள்ள முனிவர்கள் யாராவது குனி முனிவரின் மகளை திருமணம் செய்துகொண்டு அவர்கள் இருவரும் சொர்க்கத்தில் வாழ உதவி புரியுமாறு அனைத்து முனிவர்களிடமும் வேண்டினார் நாரதர்.

காலவரிஷி என்ற முனிவர் குனி முனிவரின் மகளை திருமணம் செய்து 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். அவர்கள் எல்லோரையும் நாராயணனாகிய திருமாலுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பம் கொண்டு வெகு காலமாக தவமிருந்தார். ஆனாலும் கூட திருமாலின் காட்சி கிடைக்கவில்லை.

ஒருநாள் காலவரிஷி தங்கியிருந்த குடிலுக்கு ஒரு இளைஞர் வந்தார் தான் தீர்த்த யாத்திரை மேற்கொணருப்பதாக தெரிவித்து காலவரிஷியிடம் சில உதவிகளை கேட்டான் அந்த இளைஞன்.

அந்த இளைஞனின் முகத்தில் இருந்த தெய்வீக தலையைக் கண்ட காலவ ரிஷி தன்னுடைய 360 பெண்களையும் அந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். இளைஞனும் அதற்கு சம்மதம் தெரிவித்து நாள்தோறும் ஒரு பெண் என்ற விதத்தில் 360 நாட்களில் 360 பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்.

360 ஆம் நாள் கடைசியில் இளைஞன் வடிவில் வந்த பெருமாள் தன்னுடைய வராகமூர்த்தி அவதாரத்தில் காலவரிஷிக்கு காட்சி கொடுத்தார்0 எப்போதும் திருமண காலத்திலேயே இருந்ததால் அவருக்கு நித்திய கல்யாண பெருமாள் என்று பெயர் உண்டானது.

360 பெண்களையும் ஒரே பெண்ணாக மாற்றி தன்னுடைய இடது புறத்தில் நிறுத்தி எல்லோருக்கும் காட்சி கொடுத்தார். திரு என்ற மகாலட்சுமி தேவியை தன்னுடைய இடது பக்கத்தில் வைத்து சேவை செய்ததால் தான் இந்த தளம் திருவிட எந்தை என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் திருவிடந்தை என்று மாறிப்போனது.

வழி எனும் அரக்க குல அரசன் தன்னுடைய பிரம்மஹத்தி தோஷத்தை இத்தல பெருமாளை வழிபட்டு போக்கிக் கொண்டான் என்றும் சொல்லப்படுகிறது.

இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் எப்போதும் திருமண கோலத்திலிருப்பதால் திருமணம் காலதாமதம் ஆகின்ற ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து பூஜைகள், பரிகார முறைகளை மேற்கொண்டு பெருமாளுக்கும், தாயாருக்கும், செய்யப்படும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசனம் செய்து வழிபட மிகச் சீக்கிரமே திருமண காலத்தை தன்னை வழிபடும் திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு வழங்குகிறார் என்பது இங்கு வந்து வழிபட்டு அனுபவம் பெற்றவர்களின் வாக்காக இருக்கிறது.

அதேபோல குழந்தைப்பேறு, பொருளாதாரநிலை உயர்வு, உள்ளிட்டவற்றையும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள். இந்த திருவிடந்தை பெருமாள் கோவில் மட்டும் தான் ஒரு ஆண்டில் 365 நாட்களும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் இடமாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்மிகு ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் திருக்கோவில் சென்னை, புதுச்சேரி சாலையில் கோவளமருகே திருவிடந்தை என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து ஏராளமான புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வாடகை வண்டி சேவைகளும் கிடைக்கின்றன.

கோவில் நடைத்திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல், மதியம் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கோவில் முகவரி:

அருள்மிகு ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோவில் திருவிடந்தை காஞ்சிபுரம் மாவட்டம் 603112