பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்து இருக்கின்றது.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளை கொண்ட அந்த மாநில சட்டமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ,தேர்தல் கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஆரம்பித்து மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
தேர்தலுக்கு பின்பான கருத்து கணிப்புகள் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மற்றும் பாஜக கூட்டணி, தோல்வி அடையும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியில் அமரும் என்று ஆருடம் கூறியிருக்கின்றனர்.
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு பதிவுகள் நேற்றையதினம் எண்ணப்பட்டது.
நள்ளிரவை தாண்டியும், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது நேற்று காலை முதலே பாஜக கூட்டணி தொடர்ந்து பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.
சிறிது நேரத்திற்கு முன்னால், எல்லா தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பொய்யாக்கி இருக்கின்றன.
ஐக்கிய ஜனதா தளம், மற்றும் பாஜக, ஆகிய கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றியடைந்து பெரும்பான்மையான பலத்துடன் ஆட்சியை தக்க வைத்து இருக்கின்றது.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஒன்றிணைந்த மெகா கூட்டணி 110 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதேநேரம், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், அதிக தொகுதிகளில் என்ற தனி கட்சியாக இருக்கின்றது.
அந்த கட்சி 75 இடங்களில், வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.