இரவு நேர ஊரடங்கு அமல்! அரசு விதித்த  தீடீர் உத்தரவு!

0
88
Night curfew! The order imposed by the government!
Night curfew! The order imposed by the government!

இரவு நேர ஊரடங்கு அமல்! அரசு விதித்த  தீடீர் உத்தரவு!

கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள்  அனைவரும்  வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.தொற்று வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் அனைத்து இடங்களுக்கு செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள்  ரத்து செய்யப்பட்டது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

அதனால் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள்  மீண்டு படிபடியாக தொடங்கியது.இந்நிலையில் சீன போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா மீண்டும் படையெடுக்க தொடங்கியுள்ளது.அதனால் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருகின்றது.அதனால் சம்பா மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம்  வரையிலான சம்பா மாவட்ட பகுதியில் இரவு ஒன்பது மணி முதல் காலை ஆறு மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆணையர் அனுராதா குப்தா உத்தரவிட்டுள்ளார்.மக்கள் அடிப்படை தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் அவசரக்கால பயணம் மேற்கொண்டால் அதற்கான உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.மேலும் எல்லை பகுதியில் கண்காணிப்பு படையினர் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K