இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு! தேவையின்றி வெளியே வந்தால் – காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!!

0
50

இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு! தேவையின்றி வெளியே வந்தால் – காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!!

கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து நேற்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் சென்னையில் மாநகர் முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வெளியில் வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள் வியாபாரம் செய்வோர் ஆகியோர் அனைவரும் இரவு பத்து மணிக்கு முன்பாக தங்களது வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை அடைத்து விடவேண்டும் என்றும், அத்தியாவசியப் பணி மற்றும் மருத்துவ உதவிகோரி செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K