என் ஐ ஏ சோதனை விவகாரம்! பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்த பி.எஃப்.ஐ முயற்சி அம்பலம்!

0
116

கடந்த 22 ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழக மக்களை 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை பி எஃப் ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உட்பட அதன் துணை அமைப்புகள் அமைந்திருக்கும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

இந்த அமைப்புகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.

இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்பான பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் தடை செய்யப்பட்டவையாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவை பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்குவதால் மத ரீதியில் பொது மக்களிடையே பிளவு உண்டாக்க முயற்சி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது இது ஏதோ திடீரென்று எடுக்கப்பட்ட நடவடிக்கை கிடையாது. நீண்ட காலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சரியான ஆதாரங்களுடன் அவை உறுதி செய்யப்பட்டு இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதுவரையில் நடத்திய பல சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளனர். 2047 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டம் என்ற பெயரில் நாட்டை முஸ்லிம் நாடாக மாற்றுவது அவர்களுடைய நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே இதற்காக பயங்கரவாதம் மூலமாக பொதுமக்களிடையே அச்சுறுத்தல் உண்டாக்குவது, மதத்தின் பெயரில் முஸ்லிம் இளைஞர்களை மத தீவிரவாதிகளாக மாற்றுவது, இந்தியா முழுவதும் மதக் கலவரங்களை உண்டாக்குவது என்று பல்வேறு சதி திட்டங்களை இவர்கள் வகுத்துள்ளார்கள். தமிழ்நாடு, கேரளா போன்ற சில தென் மாநிலங்களில் இதற்காக சிலரை தேர்வு செய்து பயிற்சி வழங்கியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், உயர் காவல்துறை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொடைக்கானல் அருகே உள்ள வட்ட கனல் பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் மீது குறிப்பாக யூத மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தார்கள்.