அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்! 24 மணி நேரத்திற்குள் ரிலீஸ்!

0
115
Next update of Annatha movie! Release within 24 hours!
Next update of Annatha movie! Release within 24 hours!

அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்! 24 மணி நேரத்திற்குள் ரிலீஸ்!

கடைசியாக ரஜினியின் நடிப்பில் எ.ஆர் முருகதாஸ் இயகத்தில் வெளிவந்த படம் தான் தர்பார்.அப்படம் ஆக்ஷன் மற்றும் மகள் தந்தை பாசத்தை எடுத்துரைப்பதாக இருந்தது.அது மக்கள் மத்தியில் பெருமளவு வெற்றியடையவில்லை.ஆவலுடன் எதிர்பார்த்து படம் பார்க்க சென்ற மக்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.அதனையடுத்து ரஜினியின் 168 வது படம் தான் அண்ணாத்த ஆகும்.

இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.சிறுத்தை சிவா கடந்த நான்கு படங்களையும் அஜித் வைத்தே எடுத்தார்.இதில் இரு படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.அதனையடுத்து தற்பொழுது முதன் முறையாக சூப்பர்ஸ்டார் வைத்து படம் எடுத்துள்ளார்.மேலும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தார நடிக்க உள்ளார்.மேலும் இப்படத்தில் மீனா,குஷ்பு,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ்ராஜ் போன்றோரும் நடிக்கின்றனர்.காமெடி கதாபாத்திரத்தில் சூரி,சதீஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படம் குடும்பம் மற்றும் ஆக்ஷன் படமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் முதல் பாடல் கடந்த 5 ம் தேதி வெளியானது.இப்பாடலானது மறைந்த எஸ்பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியுள்ளார்.இவர் மறைவிற்கு பிறகு வந்த பாடல் இது என்பதால்,இப்பாடலை கண்டு மக்கள் அதிகளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி இப்பாடல் யூடியூபில் அதிகளவு டிரேன்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

எஸ்பி.பாலசுப்ரமணியம் மறைந்தாலும் அவரது பாடல் மூலம் தற்போது வரை உயிர்பித்தே காணப்படுகிறார்.இப்பாடல் அண்ணாத்த அண்ணாத்த என்று வரிகளில் எஸ்பி.பாலசுப்ரமணியம் குரலில் அமைந்துள்ளது.இதனையடுத்து அடுத்த பாடல் நாளை ரீலிஸாக உள்ளதாக கூறியுள்ளனர்.அந்த பாடலை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.மேலும் இப்படம் தீபாவளி அன்று வெளிவர உள்ளது.இந்த படத்திற்கிடையே போட்டியாக வலிமை போன்ற படங்களும் உள்ளது.தீபாவளி அன்று தான் எந்த படம் வெற்றி வாகை சூடப்போகிறது என்பது தெரியவரும்.