ஓடிடி தளத்தில் வெளியாகும் அடுத்த பெரிய திரைப்படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
159
Next big tamil film release on ott
Next big tamil film release on ott

ஓடிடி தளத்தில் வெளியாகும் அடுத்த பெரிய திரைப்படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் சிலம்பரசன் நடித்த மன்மதன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் சந்தானம்.இவர் நகைச்சுவைக்கென்று தனி பாணியை அமைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.அடுத்ததடுத்து இவர் நடித்த திரைப்படங்களில் இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் பெருமளவில் பேசப்பட்டன.இவர் நகைச்சுவை நடிகரில் மிகவும் பிரபலமானவராக வலம் வந்தார்.

இவர் தமிழ் சினிமாவின் அனைத்து உச்ச நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.நடிகர் கமல்ஹாசனுடன் மட்டும் சேர்ந்து நடிக்கவில்லை.பின்னர் அவர் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.இவர் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.இந்தத் திரைப்படத்தை ஸ்ரீநாத் இயக்கினார்.இந்த படத்தை நடிகர் சந்தானமே தயாரிக்கவும் செய்தார்.

மேலும் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வந்தார்.இவர் இனிமேல் நகைச்சுவை நடிகராக நடிப்பதில்லை எனவும் அறிவித்தார்.இவரின் ரசிகர்கள் இந்த அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இவர் மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.ஆனால் நடிகர் சந்தானம் அதனை மறுத்துவிட்டார்.இவர் அடுத்ததடுத்து கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் அனைத்து வெற்றி பெற்றன.

சமீபத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.இதனிடையே டிக்கிலோனா என்ற திரைப்படம் இவரின் நடிப்பில் வெளியாக இருக்கிறது.ரசிகர்கள் இவரின் டிக்கிலோனா திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என நடிகர் சந்தானம் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10ம் தேதி டிக்கிலோனா திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்றும் காலத்தை கடந்து செல்லும் கதை என்றும் சொல்லப்படுகிறது.மேலும் இந்த படத்தில் யோகிபாபு,மொட்டை ராஜேந்திரன்,முனிஷ்காந்த்,பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K