நியூஸிலாந்து ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாடு ரத்து

0
64

நியூஸிலாந்து, குற்றவாளிகளையும், சந்தேக நபர்களையும் ஒப்படைப்பதன் தொடர்பில் ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாட்டைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அண்மையில், சீனா, ஹாங்காங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் எதிரொலியாக, குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்பாட்டில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக நியூஸிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters) கூறினார்.

ராணுவ ஒப்பந்தம், ராணுவத்துக்கும், மக்களுக்கும் பயன்படும் பொருள்கள், ஹாங்காங்குக்கான தொழில்நுட்ப ஏற்றுமதி ஆகியவற்றின் தொடர்பிலும் அதேபோன்ற மாற்றங்கள் செய்யப்படும் என்று அவர் சொன்னார். புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் அபாயம் குறித்து எச்சரிக்கும் வகையில், ஹாங்காங் செல்லும் தனது குடிமக்களுக்கான பயண ஆலோசனையிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நியூஸிலாந்து கூறியது.

author avatar
Parthipan K