வேறு வழியில்லை: பயிற்சியாளரே களத்துக்கு வந்த வினோதம் ! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யம் !

0
48

வேறு வழியில்லை: பயிற்சியாளரே களத்துக்கு வந்த வினோதம் ! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யம் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நியுசிலாந்து அணியின் உதவி பயிற்சியாளர் லூக் ரோஞ்சி களத்தில் பீல்ட் செய்தது ரசிகர்களுக்கு அச்சர்யத்தை அளித்தது.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது நியுசிலாந்து அணி.

நியுசிலாந்து அணியின் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்களால் வரிசையாக சொதப்பியதால் இந்திய அணி தடுமாறி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜடேஜா ஆகியோரின் போராட்டம் வீணாக 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் தொடரையும் இழந்தது.

இதையடுத்து இந்தியா பேட்டிங்கின் போது களத்தில் இருந்த வீரர் ஒருவர் காயமாகி வெளியேறியதால் அவருக்குப் பதில் மாற்று வீரரை இறக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால் நியுசிலாந்து அணியின் பென்ச்சில் உள்ள கேன் வில்லியம்சன், கூகளின் மற்றும் சாண்ட்னர் ஆகியோர் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அந்த அணி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது.

வேறு வழி இல்லாத நிலையில் அந்த அணியின் உதவி பீல்டிங் பயிற்சியாளர் லூக்கி ரோஞ்ச் களத்துக்கு வந்து பீல்ட். இந்த சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யப் படுத்தியது. இதற்கு முன்னதாக இதுபோல இங்கிலாந்து பயிற்சியாளர் காலிங்வுட் பீல்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லூக் ரோஞ்சி 2017 ஆம் ஆண்டு வரை நியுசிலாந்து அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K