நியுசிலாந்தும் சூப்பர் ஓவரும்:விடாமல் துரத்தும் சோதனை-சோக்கர்ஸ் ஆக மாறும் வீரர்கள் !

0
104

நியுசிலாந்து சூப்பர் ஓவரும்:விடாமல் துரத்தும் சோதனை-சோக்கர்ஸ் ஆக மாறும் வீரர்கள் !

நியுசிலாந்து அணி இதுவரை 8 முறை சூப்பர் ஓவர் போட்டிகளில் விளையாடி 7  முறை தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு நான்காவது டி20 போட்டி நேற்று வெல்லிங்டன் நகரில் நடைபெற்றது. ஏறகனவே இந்தியா தொடரை வென்று விட்டதால் இந்த போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ரோஹித் மற்றும் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் சைனி இறக்கப்பட்டனர். டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா நிர்ணயித்த 165 ரன்கள் இலக்கை நியுசிலாந்து சிறப்பாக துரத்தியது. ஆனால் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்களை இழந்து 7 ரன்கள் இலக்கை சேர்க்க முடியாததால் போட்டி சமனில் முடிந்தது.

இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து பூம்ரா ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் முதல் இரண்டு பந்துகளில் சிக்சரும் பவுண்டரியும் விலாசி அவுட் ஆனார். அதன் பிறககு கோலி 6 ரன்கள் சேர்த்து வெற்றி பெற வைத்தார். இதன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் சூப்பர் ஓவர் வீசப்பட்டு இரண்டிலும் நியுசிலாந்து தோற்றிருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த இரு போட்டிகள் என்றில்லாமல் இதுவரை 8 சூப்பர் ஓவர்களை வீசியுள்ளது நியுசிலாந்து. அதில் மொத்தமாக 7 போட்டிகளை தோற்றுள்ளது. அதிலும் 4 முறை அந்த அணியின் முன்னணி பவுலர் சவுத்தி பந்துவீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு நியுசிலாந்து வீரர்கள் சூப்பர் ஓவரில் சொதப்பியுள்ளது.

இதுவாவது பரவாயில்லை சூப்பர் ஓவரில் சொதப்பாமலேயே ஒரு போட்டியை இழந்துள்ளது. அதுவும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தை. இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் சமமாக ரன் சேர்த்தனர். ஆனால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கோப்பையையே இழக்கவேண்டிய சூழல் உருவானது. இதுபோல சூப்பர் ஓவர் சோகம் நியுசிலாந்து அணியை கடந்த 12 ஆண்டுகளாக துரத்தி வருகிறது.

author avatar
Parthipan K