‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
118

‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இயக்குனர் நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தை இயக்கி இருந்தார்.

விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த ‘பீஸ்ட்’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே-வும், வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

‘பீஸ்ட்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் வேலைபாடுகள் நிறைவடையாத காரணத்தினால், ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதனிடையே, விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். விஜய் தற்போது நடிக்கவுள்ள புதிய படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் கடந்த 20 வருடங்களில் இப்படி ஒரு கதையை நான் கேட்கவில்லை எனவும் இந்த படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், அதன் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், படத்தின் அப்டேட் பற்றி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K