நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா?

0
427
#image_title

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தன் அடுத்த இன்னிங்ஸை துவங்கினார்.

இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த முறை இவர் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்த காடு உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றியை தேடி கொடுத்தது. அதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வரும் மார்ச் 30ம் தேதி பத்து தல என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை அடுத்து நடிகர் சிம்பு மிஸ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த படத்தை நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.

இந்த திரைப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது என தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் பத்து தல படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K