சூர்யாவின் வணங்கான் படத்தின்  புதிய அப்டேட்! இவர் தான் அந்த நடிகை வைரல் ஆகும் புகைப்படம்!

0
86
New update of Suriya's Vanangaan! This is the actress's viral photo!
New update of Suriya's Vanangaan! This is the actress's viral photo!

சூர்யாவின் வணங்கான் படத்தின்  புதிய அப்டேட்! இவர் தான் அந்த நடிகை வைரல் ஆகும் புகைப்படம்!

சூர்யா எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை நடித்து வந்த நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.இதனை தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

சூர்யாவுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை போட்டோவுடன் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அந்த தகவலில் தற்போது சூர்யா ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் நடித்து பாப்புலராக இருக்கும் மஹிரா ஷர்மா என்ற நடிகை தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். சூர்யாவின் ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

author avatar
Parthipan K