ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இனி இந்த பொருளும் வழங்கப்படும்?

0
190
New update for ration card holders! Will this item be offered any longer?
New update for ration card holders! Will this item be offered any longer?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இனி இந்த பொருளும் வழங்கப்படும்?

2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் காகிதம் இல்லா இ பட்ஜெட்டாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை விவசாய நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளார் தமிழகத்தில் தற்போது 63 லட்சத்து 43 ஆயிரத்து ஹெக்டர் ஆக சாகுபடி பரப்பு உள்ளது.

புன்செய் நிலங்களுக்கும் உரிய பயிர்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தானியங்கள் மட்டுமல்லாமல் காய்கறிகள் மற்றும் பழங்கள் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்தை பாதுகாப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில் தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தல 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 2500 கிராம மக்களுக்கு 15 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். ஐந்து மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி ஆதிதிராவிடர்  பழங்குடியினர் விவசாயிகளுக்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து விவசாயிகள் வானிலை அறிவிப்புகள் போன்ற முன்னறிவிப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K