Connect with us

Breaking News

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 குறித்து வெளிவந்த நியூ அப்டேட்! இவர்களுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்பு!

Published

on

New update about Rs 1000 per month for heads of household! Only these people have the opportunity!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 குறித்து வெளிவந்த நியூ அப்டேட்! இவர்களுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்பு!

கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக கட்சியானது மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ரூ ஆயிரம் போன்றவை இடம்பெற்றது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டம் போன்ற வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தியது.

Advertisement

இருப்பினும் குடும்பத்தலைவனுக்கு மாதம் ரூ 1000 வழக்கும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு அவ்வப்போது முதல்வர் மு க ஸ்டாலின் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என கூறிவந்தார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் இந்த மாதம் சட்டசபையில் தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.

மேலும் இந்த திட்டத்தில் யார் யாருக்கு மாதம் ரூ 1000 கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பயணிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பிஎச்,  என்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பிஹெச் ஏஏஒய்  என்ற அந்தியோதயா அன்னை யோஜனா திட்ட அட்டை அதாவது 35 கிலோ அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க வாய்ப்புள்ளது. குடும்ப தலைவிகளுக்கு  தான் உரிமைத்தொகை என்பதால் குடும்ப அட்டையின் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement