செயற்கைக்கோளின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த கையாளும் புதிய யுத்தி?

0
92

பெய்தாவ் மூன்று என்னும் உலகளாவிய வழிகாட்டல் செயற்கைக்கோள் அமைப்பின் தொடக்க மாநாடு இன்று ஜூலை 31ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.சீனா ,ஆசியா, பசுபிக் மற்றும் உலகத்திற்கு சேவை வழங்குதல் என்று மூன்று குறிக்கோளுடன் கடந்த 26 ஆண்டுகளில் 55 செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது ஒரு பெரிய சாதனையாகும்.சீன விண்வெளி பயண துறைக்கும், அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கும் இந்த வெற்றி மாபெரும் பரிசாக இருக்கிறது.

உலக பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் அறிவியல் தொழில்நுட்பம் ஒரு ஆதாரமாக விளங்கி, புதிய வளர்ச்சியை உண்டாக்கி தந்துள்ளது இந்தசெயற்கைக்கோள்.

பெய்தாவ் செயற்கைக்கோள் உலகிலேயே நான்காவது மிகப்பெரிய புவியிடங்காட்டியாகத் திகழ்கிறது.அமெரிக்காவின் ஜிபிஎஸ், ரஷ்யாவின் கிரோனஸ் ,ஜப்பானின் கலிலியோ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இச்செயற்கைக் கோள் விளங்குகிறது.தகவல் தொடர்பும், வழிகாட்டலும் ஒன்றிணைந்து சேவை செய்வது இதன் தனிச்சிறப்பாகும்.

உலக அளவில் இது 5 மீட்டருக்கும் குறைவான வேறுபாடு காட்டும் எனவும், இந்த செயற்கைக்கோள் மிகக்குறைந்த பிழை விளிம்பு ஒரு சென்டிமீட்டர் மட்டுமே எனக் கூறியுள்ளனர் .இதன் மூலம் 10 நானோ வினாடிக்குள் நேர ஒளிப்பரப்பு உலகில் சரியாக தெரிவதாகவும் தெரிவித்துள்ளனர். நிதி, மின்னாற்றல் ,தகவல் தொடர்பு ஆகிய துறைகள் துல்லியமாக நேர ஒளிபரப்பு மிக முக்கியத்துவமாக இருக்கிறது. இதனை இச்செயற்கைக்கோள் சரியாக கணிப்பதாக சொல்லப்படுகிறது.

பெய்தாவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் சேர்த்து பொருளாதாரம் மற்றும் தொழில் துறையும் வளர்ச்சிக்கு துணை புரியும் என நம்பப்படுகிறது.உலக அளவில் 50% மேலான நாடுகள் இச்செயற்கைக்கோளை பயன்படுத்தி வருவதாகவும், அறிவியல் சாதனையல் சீனா உலக நாடுகளில் பொருளாதாரத்தில் மேம்பட இனிதே வாய்பாக அமைந்துள்ளது.

author avatar
Parthipan K