அடுத்து வந்த ஆபத்து! கொரோனாவின் புதிய அறிகுறி இது தான்? மருத்துவர்கள் எச்சரிக்கை!

0
71

அடுத்து வந்த ஆபத்து! கொரோனாவின் புதிய அறிகுறி இது தான்? மருத்துவர்கள் எச்சரிக்கை!

கடந்த 2019 ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவப்பட்ட தொற்று கொரோனா ஆகும்.அதன் இரண்டாம் அலையை அனைத்து நாடுகளும் சமாளிக்க முயற்சி செய்கிறது.

ஆனால்,இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பல மறக்கமுடியாத அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.கடந்த 2020 ம் வருட இறுதியில் இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் உருமாறிய கொரோனா நோய் தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அது இந்தியாவில் பரவ தொடங்கி மக்கள் மத்தியில் மிகவும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா பாதிப்புகள் என நாம் காய்ச்சல், உடல் வெப்பநிலை அதிகரித்தல், மூச்சு திணறல் மட்டும் அல்லாது தற்போது புது அறிகுறி தென்படுவதாக பெங்களூரில் உள்ள கொவிட் பணி குழுவில் ஈடுபட்டுள்ள டாக்டர் ஜி.பி. சத்தூர் கூறியுள்ளார்.

அதை பற்றி அவர் கூறுகையில், அந்த அறிகுறி கொவிட் டங் (நாக்கு) என்ற புதிய அறிகுறி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், 55 வயதுடைய ஒரு நபர் தன்னை சந்தித்ததாகவும், அவருக்கு உடல் வெப்பநிலை இல்லாத நிலையிலும் உடல் சோர்வாகிறது என்றும், மேலும் அவர் இரத்த அழுத்த சிகிச்சை மேற்கொள்ள வந்ததாவும், அவருக்கு நாக்கில் வறட்சி உள்ளது எனவும் கூறி உள்ளார்.அவரது சர்க்கரை அளவை சோதனை செய்து பார்த்ததில் எந்த ஒரு வித்யாசமும் தெரியவில்லை.

ஆனால்,  ரத்தத்தில் உள்ள எரித்ரோசைட் படிவு விகிதம் அதிக அளவில் இருந்தது.அதனால் சந்தேகமடைந்த நான், அவரை கொரோனா தொற்று இருக்கலாம் எனவே நீங்கள் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டு வாருங்கள் என்று கூறினேன்.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அதன்பின் மருத்துவமனையில், சேர்ந்து தகுந்த ஆலோசனை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பினார் என்ற அதிர்ச்சி தவளை வெளியிட்டுள்ளார்.இந்த அறிகுறி பின்புலன் பற்றி மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கிலாந்து, பிரேசில் மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட  இரட்டை உருமாறிய கொரோனா போன்ற புதிய வகை வைரசாக இருக்கலாம் என மருத்துவர் கூறினார்.

ஆனாலும் நாக்கு பாதிப்புகளுக்காக வரும் நோயாளிகளையும், மருத்துவர்கள் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், அரசு, இந்த வகை கொரோனா வைரஸ்களை பற்றி நன்றாக அறிந்து கொள்வதற்காக மரபணு தொடர் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.