அரசு ஊழியர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம்!! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!!

0
73

தமிழக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மின்வாரிய ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் மின்வாரிய ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் அரசு ஊழியர்களின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் உடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த திட்டம் தற்போது மின் வாரிய ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டு இருக்கின்றது.

மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேலும் அவர்களின் குடும்பத்தினர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இதற்காக ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அரிய வகை சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் வரை காப்பீடு தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்திருக்கின்றது. இந்த புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டமானது கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் 2025 ஜூன் 30 வரை நான்கு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் சிகிச்சை பெறுவதற்காக 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிகிறது. மேலும் இதற்காக அவர்களின் ஊதியத்தில் மாதம்தோறும் 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

author avatar
Jayachithra