ஓட்டுனர் உரிமம் பெற புதிய ரூல்ஸ்! போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

0
99
New rules to get driver's license! Notice issued by the Transport Authority!
New rules to get driver's license! Notice issued by the Transport Authority!

ஓட்டுனர் உரிமம் பெற புதிய ரூல்ஸ்! போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை போக்குவரத்து ஆணையம் வெளியிட்டது. ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர்கள் வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும், இதர நாட்களில் மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தினர். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டை ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் எதிர்த்து முற்றுகையிட்டனர். மேலும் ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தம் செய்தனர்.

இவ்வாறு நடந்து வந்த நிலையில் ஏன் இவ்வாறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளோம் என்பது குறித்து போக்குவரத்து துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழக போக்குவரத்து துறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள் அதிக அளவிற்கு செயல்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. அதனை தடுக்கவே இந்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளோம். இனிவரும் நாட்களில் பொதுமக்கள் நேரடியாகவே ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு முன் போக்குவரத்து துறை அமைச்சர், உள்துறை செயலர் ஆகியோரின் ஆலோசனைகள் இந்த விதிமுறைகளை அமல்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர்கள் வாரத்தில் இரண்டு நாட்களிலும் இதர பொதுமக்கள் மூன்று நாட்களிலும் ஓட்டுனர் உரிமம் தேர்வில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ளலாம்.