புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

0
36

புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதன் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 30ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. ஒமிக்ரான் தொற்றும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பலி எண்ணிக்கையும் அவ்வளவாக உயரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி தமிழ்நாட்டில் தற்போது உள்ள ஊரடங்கில் தளர்வு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதையடுத்து ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது. அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத கூட்டம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்துவது குறித்தும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தற்போது உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் தற்போது உள்ள கட்டுப்பாடுகளிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பொதுவான சில கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்ககூடும் என எதிபார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K