12400 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்! கோவையில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

0
95

கோயம்புத்தூரில் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியபோது நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் பெரும் பங்காற்றி வருகின்றது என்று தெரிவித்திருக்கிறார். தொழில் வளர்ச்சிக்கு தடையில்லாத மின்சாரம் அவசியம் இந்த சூழ்நிலையில் புதிய மின் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நெய்வேலியில் ஆயிரம் மெகாவாட் திறன் உள்ள புதிய அனல் மின் திட்டம் 1800 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65 சதவீதத்திற்கும் மேலான மின்சாரம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோல ஸ்ரீபெரும்புதூர் அருகே பல்வகை சரக்குகளை கையாளும் வகையில் புதிய பூங்கா ஒன்று விரைவாக ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும், வஉசி துறைமுக பகுதியில் இருக்கின்ற சாலைகள் எட்டு வழி சாலையாக விரிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். பிரதமருடைய நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 330 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வைக்கிற குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார்.