இன்று புதிய அதிபர் தேர்தல்! எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

இன்று புதிய அதிபர் தேர்தல்! எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது.

மேலும் அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக இந்தியா கூறியது.அதன்படி, 40 டன் டீசல், 11 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தது.அதனால்  ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள் அதிபர், பிரதமர். நிதியமைச்சர் என அனைத்து 66 ராஜபக்சேக்களையும் பதவி விலக வலியுறுத்தி தெருவில் இறங்கி போராடினார்கள். அதனை அடுத்து அவர் பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ரணில் விக்ரமசிங்கே வெளியேற்று இரண்டு மாதங்கள் கூட முழுமையாக ஆகாத நிலையில் இலங்கையின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது. அதனால் இப்பொழுது, தனியார் வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் உள்ள சிர­மம் ஏற்ப்பட்டுள்ளது.

 பெட்ரோல் டீசல் எரிவாயு ஆகியவை கிடைத்தாலும் அத்தியாவசிய பொருளான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாலும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக தலைநகரான கொழும்பில் பொதுமக்கள் 09.08.2022 அன்று அதிபர் மாளிகை அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அப்போது கோத்த பையா ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கும் சென்று சிங்கப்பூரிலிருந்து அவருடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா செய்வதாக இ-மெயில் மூலம் கோத்தபய ராஜபக்சே பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதத்தை அனுப்பினார். இதனைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில்விக்ரம்சிங்கே நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தனர். மேலும் புதிய அதிபரை இன்று பாராளுமன்றத்தில் எம்பிகள் வாக்களித்து தேர்வு செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரயில் விக்ரம் சிங்கே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் ஜேவிபி கட்சித் தலைவர் போன்றவர்கள் போட்டியிடவுள்ளனர்.

மேலும் 255 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெரும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது அக்கட்சி ரணில் விக்ரமசிங்கேவே ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இலங்கை மக்கள் கட்சித் தலைவரின் ஒருவரான ஜிஎல் ப்ளீஸ் அணியினர் முன்னாள் மந்திரி ட்ரெலஸ் அழகா பெறுமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் ஆளுகட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனப்படுத்துவதாக நேற்று முன்தினம் இடைக்கால அதிபர் ரணில்  விக்ரம் சிங்கே அறிவித்தார். இந்நிலையில்  அடுத்து ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும்  இன்று அதிபர் தேர்வு நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு  மற்றும் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளது. அதிபர் பதவிக்கு போட்டியிடப்படும் ரணில் விக்ரமசிங்கேவே  போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment