உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்! துரைமுருகன் சூசகப்பேச்சு!

0
78

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக வின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்ற அந்த கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு மிக விரைவில் கட்டுப்படுத்தப்பட்டடு இருக்கிறது. அதற்கு தமிழக முதலமைச்சரின் நடவடிக்கை தான் காரணம் தற்சமயம் உலகமே உற்று நோக்கும் விதத்தில் அதிக தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருகின்றது. பொதுமக்களின் உயிரை காக்கும் அரசாக அதிமுக அரசு இருக்கிறது என கூறியிருக்கிறார்.

ஆனால் நாம் இதுவரையில் முழுமையாக பணி புரியவில்லை ஆனால் அதற்கு முன்பாகவே இந்த தேர்தல் வந்துவிட்டது ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த 150 தினங்களில் அவர் புரிந்த பபணிகள் சிறப்புக்கு உரியது. நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் நம் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் எல்லோரும் வெற்றி பெறுவதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். .உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்களும் ஓய்வில்லாமல் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். அப்படி தேர்தல் பணி செய்யாத நிர்வாகிகள் கட்சியில் தனிமைப்படுத்த படுவார்கள் என எச்சரிக்கை செய்திருக்கிறார் துரைமுருகன்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியான பின்னர் மூன்று நாட்களில் கூட்டுறவு சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு புதிதாக நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்படும் அதேபோல 32 வாரியங்களும் கலைக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாதவர்களுக்கு பதவிகள் அளிக்கப்படும் பத்து வருட காலம் பதவியில் இருந்தவர்கள் நீக்கப்படுவார்கள், இந்த ஆட்சியில் ஐந்து வருடமாவது தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும், ஆகவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நம்முடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நிர்வாகிகள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து எல்லோரையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் உரையாற்றி இருக்கிறார்.