நாட்டில் அதிகரிக்கும் ஒமிக்ரான் நோய்தொற்று!

0
56

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவும் தன்மை அதிகமாக கொண்டதாகவும், ஆபத்தானதாகவும், இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது இதன் காரணமாக, உயிர் இழப்பை தவிர்க்க எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், இந்த வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவில் 5 பேருக்கு இருந்த இந்த பாதிப்பு தற்சமயம் 21க அதிகரித்திருக்கிறது அதோடு தலைநகர் புதுடெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமல்லாது தற்சமயம் ராஜஸ்தான் மாநிலத்திற்கும் இந்த நோய் பரவி இருக்கிறது. அதிலும் குறிப்பாக நேற்று ஒரே நாளில் டெல்லியில் ஒருவருக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் 7 பேருக்கும் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், என்று ஒட்டு மொத்தமாக 17 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிர மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் பிரதீப் லியாஸ் தெரிவிக்கும்போது, நைஜீரியாவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த 7 பேரும் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 4 பேர் பெரியவர்கள், 3 பேர் சிறியவர்கள் இந்த நான்கு பேரும் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு தவணையை எடுத்துக்கொண்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஒன்பது பேருக்கு இந்த தோற்று உறுதியாகி இருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.

இதன்மூலமாக இதுவரையில் நாட்டில் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது இதன் காரணமாக, பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்த மாநில அரசுகள் அறிவுறுத்தி இருக்கின்றன.