பாதுகாப்பு கட்டமைப்பை குறித்த (TRAI) வெளியிட்ட புதிய அறிவிப்பு !!!

0
81

பேஸ்புக் ,வாட்ஸ் அப் மெசஞ்சர் ,கூகுள் ஹேர் ,ஸ்கைப் ,டெலிகிராம் உள்ளிட்ட ஓடிடி செயலிகளை இனி தொடர்ந்து கண்காணிக்க தேவையில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (TRAI) அறிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் வாட்ஸ்அப் ,பேஸ்புக் மெசஞ்சர் உள்ளிட்ட ஓடிடி செயல்களை தொடர்ந்து கண்காணிக்க செயல்படுத்த வேண்டும் என இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். மேலும் ,இந்தியாவில் வட மாநிலங்களில் மாட்டுக்கறி விவகாரத்தில் ஒரு கும்பல் தாக்கியதில் சிலர் கொல்லப்பட்டதை போன்ற பல்வேறு வதந்திகள் வாட்ஸ் அப் மூலம் பரவியதை தொடர்ந்து, அதனை தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட தகவல்களை இடைமறித்து அறியும் வசதியைப் வழங்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டதனை ஏற்க மறுத்த வாட்ஸ்அப் நிறுவனம் ஒட்டுமொத்தமாக செய்திகளை அனுப்புவதற்கு சில கட்டுப்பாடுகளை வகுத்தது.

இந்நிலையில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசேஞ்சர், கூகுள் சார் உள்ளிட்ட சேவைகளை இடைமறித்து கண்காணிக்க இனி தேவையில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (TRAI) தற்பொழுது தெரிவித்துள்ளது . தகவல் தொடர்பு செயலிகளில் இடைமறித்து கண்காணிக்கப்படுவதால், பாதுகாப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்றும் சட்ட விரோத செயல்கள் அடிப்படையாக நேரிடும் என்று கருத்து தெரிவித்துள்ளது.மேலும் ,இந்த முடிவுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை.

author avatar
Parthipan K