இன்று முதல் இவையெல்லாம் இயங்கும்:! தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு?

0
65

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.ஊரடங்கின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும்,வழிபாட்டுத் தலங்களும்,பொது போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டது.அவ்வப்போது சில தளர்வுகளுடன் எட்டு கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த மாதம் கிராமங்களிலுள்ள சிறு வழிபாட்டு தலங்களை மட்டும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
அடுத்த கட்ட தளர்வாக இன்று முதல் கோயில்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விதிக்குட்பட்ட கோயில்களுக்கு மட்டுமே அனுமதி?

மாநகராட்சி மற்றும் நகராட்சி யில் உள்ள சிறிய கோயில்கள் திறக்க தமிழக அரசு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதாவது ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள கோயில்கள்,மசூதிகள்,
தேவாலயங்கள் மட்டும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட வழிபாட்டு தலங்களை திறக்க அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற பின்பே திறக்க அனுமதி அளித்துள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி பொருத்தமட்டில் கமிஷனரிடம் முறையான அனுமதி பெற்று வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் ஓட்டுநர் பள்ளிகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
Pavithra