ஒரு அமெரிக்க நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு – என்ன தெரியுமா?

0
65

ராவ்ன் எக்ஸ் என்ற பெயரில், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவக்கூடிய மற்றும் முழுவதும் தானியங்கியாகவே செயல்படக்கூடிய அமைப்பு கொண்ட ட்ரான் விமானத்தை அமெரிக்க நிறுவனமான இவம் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த ராவ்ன் எக்ஸ் என்ற விமானம் 80 அடி நீளம் கொண்ட மற்றும் வானத்தில் மிக வேகமாக பறக்கும் திறன் கொண்ட ட்ரான் விமானமாகும். இந்த விமானம் 18 அடி உயரமும், 28 டன் கனமும் மற்றும் 16 அடி நீளம் கொண்ட இறக்கைகள் கொண்டதாகும்.

மேலும் இந்த ராவ்ன் எக்ஸ் ட்ரான் விமானம் மூலம் நினைத்த இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் செயற்கைகோளை விரைவாக நிலைநிறுத்த முடியும் என்று இந்த விமானத்தை தயாரித்த இவம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், “ஒருமையில் நீளம் கொண்ட எந்த ஒரு ஓடுபாதையிலும் இந்த விமானத்தை இயக்க முடியும் என்றும் இதனை தயாரித்த இவம் நிறுவனம் தெரிவித்துள்ளது”. மேலும் அஸ்லோன் 45 என்ற பெயரில் ஒரு சிறிய செயற்கை கோளை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடு செய்து வருவதாகவும் இந்த இவம் நிறுவனம் கூறியுள்ளது  குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Parthipan K