வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புது அம்சம்!

0
115

வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புது அம்சம்!

உலகின் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப்-இல் ஸ்டேடஸ் என்பது அதன் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரதான அம்சமாகும். தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது ஸ்டேடஸ் அம்சத்தில் சில மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக சொல்லப்படுகிறது.

வாட்ஸ்அப் ஒரு புதிய புதுப்[பிப்பை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பின் மூலம் உங்கள் ஸ்டேடஸை யார் பார்க்கலாம் என்பதை நிர்வகிப்பதற்கான புதிய சார்ட்கட் ஆகும். இந்த அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஸ்டேடஸ் தனியுரிமைக்கான சார்ட்கட்டை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது யார் தங்கள் ஸ்டேடஸை பார்க்க முடியும் மற்றும் யார் தங்கள் ஸ்டேடஸை பார்க்க முடியாது என்பது போல் இல்லாமல், ஒவ்வொரு முறையும் தங்கள் ஸ்டேடஸின் தனியுரிமை அமைப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய ஒரு குறிப்பிட்ட நடைமுறை கொண்டுவரப்பட இருக்கிறது.

எனவே, வாட்ஸ்அப் ஸ்டேடஸ் தனியுரிமை அமைப்புகளுக்கான புதிய சார்ட்கட் அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவும், விரைவில் வரும் எனவும் சொல்லப்படுகிறது. பயனர்கள் ஒவ்வொரு புதிய ஸ்டேடஸை பதிவிடும் போதெல்லாம் குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து தங்கள் நிலையை மறைக்கும் விருப்பத்தை பெறுவார்கள்.

இது ஒரு சிறந்த அம்சமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு முறை வாட்ஸ்அப் ஸ்டேடஸ் பதிவிட முயற்சிக்கும் போதெல்லாம் டிஸ்ப்ளேயின் அடிப்பகுதியில் கேப்ஷன் பார் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

author avatar
Parthipan K