உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

0
77

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒரு கொரோனா இரண்டாவது அலை தாக்கமானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அத்துடன் பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 111நாடுகளில் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பல நோயாளிகள் இழந்து உள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மருத்துவமனைகளில் உயிரை பறிக்கக்கூடிய ஒரு பூஞ்சை தொற்று நோய் பரவி வருவதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் குழு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.

கேண்டிடா ஆரிஸ் என்கிற இந்த பூஞ்சை தொற்று, ரத்த ஓட்டத்தை முழுவதுமாக பாதித்து மரணத்தை ஏற்படுத்தக்கூடிய வீரியத்தை பெற்றதாகும். அத்துடன் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, இதுவரை வாஷிங்டனில் 101 பேருக்கு இந்த புஞ்சை தோற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

டல்லாஸ் மாகாணத்தில் 22 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பேரைச் நியூயார்க்கில் உயர் சிகிச்சைகள் வழங்கி காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இதனை உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல் என்று கூறியிருக்கிறது.

காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவை கேண்டிடா ஆரிஸ் நோய்த்தொற்றின் மிகவும் பொதுவான அறிகுறிகளாகும். சமீபத்திய காலங்களில் இவை ஏன் தொற்றுநோய்களை ஏற்பட தொடங்கின என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

author avatar
Jayachithra