வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் மீன் பிடிக்க தடை!

0
98
New depression in the Bay of Bengal! Fishermen are prohibited to catch fish!
New depression in the Bay of Bengal! Fishermen are prohibited to catch fish!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் மீன் பிடிக்க தடை!

வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வேதாரண்யத்தில் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.வங்க கடலில் இன்று அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அதன் காரணமாக மணிக்கு 45 கி.மீ வரை சூறைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து மீன்வளத்துறை மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் , வெள்ளபள்ளம், மணின்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.