நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை முயலாக மாறுமா?

0
83

வங்கக்கடல் பகுதியில் நாளைய தினம் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே நாளை மறுநாள் வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் ஆகவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படும் அப்படி ஏற்பட்டால் அது கரையை நோக்கி நகரும் போது வலுவடையும் வாய்ப்பு இருக்கிறது என்றும், புயலாக மாறுமா? என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள twitter பதிவில் அடுத்த மழை 20ம் தேதி வாக்கில் ஆரம்பமாகும். ஒன்று இரண்டு நாட்கள் முன்பின் இருக்கலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கே ஏற்படலாம்.

அது வலிமை குறைந்த சூறாவளியாகவோ அல்லது தாழ்வு பகுதியாகவோ மாறலாம். இந்த காலகட்டத்தில் முதல் சக்கரம் இது எனவும், தெரிவிக்கலாம் என்று தன்னுடைய வலைதள பக்கத்தில் கூறியிருந்தார்.