முல்லை பெரியாறு அணையின் மீளாய்வுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

0
76

தமிழகம் மற்றும் கேரள எல்லையிலிருக்கின்ற முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியை தமிழக மற்றும் கேரள அரசுகள் தவணை முறையில் ஏற்றிருக்கின்றன. அதன்படி தற்சமயம் பாதுகாப்பு பணி நடைபெற்று வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி காங்கிரஸ் தலைமையிலான அமர்வு முன்பு ஆரம்பமாகியது. கேரள அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதங்களை முன்வைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, முல்லை பெரியார் அணையில் நீரைத் தேக்கிவைக்கும் அளவை அதிகரிக்க மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு வழங்கிய பரிந்துரை விவாதமாக இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு அந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்திருக்கிறது அணையில் அதிக அளவிலான நீர் தேக்கி வைக்கப்படுகிறது இந்த விவகாரம் நீர் பங்கீடு தொடர்புடையதல்ல அணை பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் கேரளத்தைச் சார்ந்த தொழில் நுட்பம் சார்ந்த உறுப்பினர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்பு குழுவை மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார் இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண புதிய அணை கட்டுவது ஒன்றே கேரள அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.

ஆனாலும் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது புதிய அணை கட்டுவது குறித்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று வாதிட்டிருக்கிறார் கேரள மாநில வழக்கறிஞர்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ரிட் மனுக்கள் மீதான விசாரணை நாளை அதாவது இன்றைய தினம் விசாரணைக்கு வரும் என்று ஒத்திவைத்தார். முன்னதாக கேரள அரசு தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசின் சார்பாக விளக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 9.81 கோடி ஒதுக்கியிருக்கிறது. ஆனாலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு கேரள அரசு சார்பாக அனுமதி வழங்கப்படவில்லை. கேரள அரசு அனுமதிக்கும் பட்சத்தில் பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

10 வருடத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மீளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.. நிபுணர் குழுவின் பரிந்துரையினடிப்படையில் அணையை பலப்படுத்த வேண்டிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் சட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணையின் உரிமையாளராக இருக்கின்ற தமிழக அரசு அணையின் பாதுகாப்பிற்காக 2020 ஆம் வருடத்திற்குள் மீளாய்வு செய்ய வேண்டும். இதற்காக கொண்டு செல்லப்படும் பொருட்களை அனுமதிக்க கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று விளக்க மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.