Connect with us

Breaking News

கிணற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

Published

on

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், கட்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் சவாரிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை காணாமல் இருந்துள்ளது.

Advertisement

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கிணற்றை காட்டியுள்ளார். அங்கு சென்று பார்த்த போது குழந்தை சடலமாக மிதந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இசக்கியம்மாள் மனநலம் சரியில்லாததால் குழந்தையை கொலை செய்து விட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement