வைரஸ் தொற்றில் சிக்கி சீரழியும் இங்கிலாந்து! ஒரேநாளில் 1.22 லட்சம் பாதிப்புகள்!

0
73

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவெடுத்த கொரோனா பரவல் தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு உலக வல்லரசான அமெரிக்கா.

இன்னும் சொல்லப்போனால் சீனா திட்டமிட்டு இந்த நோயை உலக நாடுகளுக்கு பரப்பியதாக அந்த நாட்டின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அத்துடன் இதுதொடர்பான விசாரணை ஐநா சபையில் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

உலக நாடுகள் இந்த நோயின் காரணமாக, வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு உலகப் பொருளாதாரமும் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஆனால் சீனாவில் புதுப்புது கண்டுபிடிப்புகள், புது, புது ஆராய்ச்சி என்று தெற்காசிய நாடுகளில் தன்னை ஒரு வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் வல்லரசு என்ற கனவு நனவாக அதற்காக வேண்டுமென்றே இந்த நோய் தொற்றை உலக நாடுகளுக்கு பரப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக அங்கே நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

உலக அளவில் நோய்த்தொற்று பரவல் பாதிப்பில் இங்கிலாந்து தற்சமயம் நான்காவது இடத்தில் இருக்கிறது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக, மேலும் இந்த நோய் தொற்று அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அந்த நாட்டில் கடந்த ஒரு வார காலமாக 50 ஆயிரம் முதல் 1லட்சம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது, இதற்கிடையில் 5 முதல் 15 வயதிற்கு உட்பட்ட நபர்களுக்கு நோய் தொற்று தடுப்பூசி செலுத்த இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், நேற்றைய தினம் இங்கிலாந்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 186 பேர் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதன்மூலமாக அங்கேயே நோய்தொற்று பாதிக்கப்பட்டோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1 கோடியே 18 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது.

இதுவரையில் அங்கே இந்த நோய் தொற்று பாதிப்பு காரணமாக, 137 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக, அந்த நாட்டில் இதுவரையில் நோய் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 852 ஆக அதிகரித்திருக்கிறது.

அதோடு இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99.61 லட்சத்தை தாண்டி இருக்கிறது. தற்சமயம் 17.22 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.